தேனிலவு செல்லும் ஸ்ரீகாந்த் - வந்தனா [11. Sep. 2007 - 02:56]
இந்தியாவும் பாகிஸ்தானுமாக இருந்தவர்கள் இப்போது காந்தியும் அகிம்சையும் போல பிரிக்க முடியாதவர்களாகி விட்டனர். இம்மாதம் ஏழாம்தேதி வைதீக முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஸ்ரீகாந்த் வந்தனா ஜோடி தேனிலவுக்காக பதினைந்து நாள் வெளிநாடு பறக்கிறது. read more
பத்மா விவகாரத்தில் பணம் பார்த்தாரா நிர்மல்? [11. Sep. 2007 - 02:53]
நடிகை பத்மா விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளான ஆந்திர தொழிலதிபர் பிரதீப் கோணேருவின் நண்பரான நிர்மல், மீது புதுப் புகார் கிளம்பியுள்ளது. பத்மா விவகாரத்தை சொல்லி கோணேருவிடமிருந்து பல கோடி பணத்தை நிர்மல் சுட்டு விட்டதாக கூறப்படுகிறது. சேராத இடம் தன்னில் சேர வேண்டாம், கூடா நட்பு வேண்டவே வேண்டாம் என்ற முதுமொழிகளை எல்லாம் முதுகில் குத்தி விரட்டி விட்டு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக இருந்த பத்மா இப்போது பலான செய்கையால், சிந்தை அடிபட்டு, சிறையில் அடைபட்டு, read more
நீதிமன்ற சிக்கலில் 'அழகிய தமிழ்மகன்' [ 8. Sep. 2007 - 07:40]
காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பார்கள். அதுபோல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தின் கதையை சொந்தம் கொண்டாடி வழக்கு தொடருவது வழக்கமாகிவிட்டது. பட அதிபர் அப்பச்சன் 'அழகிய தமிழ்மகன்' படத்தை தயாரித்து வருகிறார். இதில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் கதை, எங்கள் பட நிறுவனத்துக்கு சொந்தமானது என்று இன்னொரு பட தயாரிப்பாளர் முகமது பரூக் சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார்.
நடிகை ஷ்ரேயா ரெட்டிக்கும், நடிகர் விஷாலின் அண்ணனும், தயாரிப்பாளருமான விக்ரம் கிருஷ்ணாவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 9ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.விக்ரம் கிருஷ்ணா தயாரித்த திமிரு படத்தில் நடித்தபோதுதான் ஷ்ரேயாவுக்கும் அவருக்கும் காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தற்போது இவர்களின் கல்யாண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. read more
விஜய் படம்: மீண்டும் த்ரிஷா, நயன்தாரா திடீர் நீக்கம் [ 5. Sep. 2007 - 04:27]
விஜய் நடிக்கும் 'குருவி' படத்திலிருந்து நயன்தாரா திடீரென நீக்கப்பட்டுள்ளார். விஜய் நடிப்பில் தரணி இயக்கும் படம் 'குருவி'. இப்படத்தில் நடிக்க த்ரிஷாவை தேர்வு செய்திருந்தனர். பின் அவர் மாற்றப்படுவார் என கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே நயன்தாராவை ஹீரோயினாக தேர்ந்தெடுத்தனர். இதற்கான ஒப்பந்தத்திலும் நயன்தாரா கடந்த வாரம் கையெழுத்திட்டார். நயன்தாரா நடிப்பதாக செய்தி வெளியாகி, இரண்டே நாட்களில் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இப்போது அந்த வேடத்தில் மீண்டும் த்ரிஷா நடிக்க உள்ளார்.
பிச்சை எடுக்கும் நிலையில் மாடல் அழகி! [ 4. Sep. 2007 - 15:48]
ஒரு காலத்தில் முன்னணி மாடல் அழகியாக கேட் வாக் செய்து கொண்டிருந்த பெண், போதைப் பொருளுக்கு அடிமையானதால் குடும்பத்தாரால் கைவிடப்பட்டு டெல்லி தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த பரிதாபத்துக்குரிய அழகியின் பெயர் கீதாஞ்சலி நாக்பால். மாடல் அழகியான அவருக்கு தற்போது வயது 32. இப்போதைய அவரது நிலை மிகவும் அவலமானது.
இன்றை சினிமா செய்திகளின் தொகுப்பு. [ 4. Sep. 2007 - 02:32]
தமிழ்நாட்டில் தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கத்தில், நல்ல தமிழ்ப் பெயர்களைப் படங்களுக்குச் சூட்டினால், கேளிக்கை வரி செலுத்த வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட்ட திரையுலகினர், தங்கள் படங்களுக்குத் தமிழில் பெயரிடத் தொடங்கினர். ஆனால், சில படங்களுக்கு மட்டும் வன்சொற்கள் தலைப்பாகச் சூட்டப்பட்டன.
ஈழத் தமிழர் வரலாறு வி.சி.குகநாதன் இயக்குகிறார் [ 4. Sep. 2007 - 02:24]
‘தமிழ் பாசறை’ என்ற பட நிறுவனம் ஈழத் தமிழர் வரலாற்று திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதை வி.சி.குகநாதன் இயக்குகிறார். தேவா இசை அமைக்கிறார். அர்ச்சனா, ராரி, சுஜா நடித்துள்ளனர். பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. நவம்பர்-26 ம் தேதி படம் வெளியிடப்படுகிறது.
வெயில், திமிரு, பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடிக்க கிடைத்தது போன்ற கெட்டியான ரோலுக்காக காத்திருக்கிறாராம் ஷ்ரேயா ரெட்டி. எஸ்.எஸ்.மியூசிக்கில், ஃப்ரீக்காக வந்து போய்க் கொண்டிருந்த ஷ்ரேயா ரெட்டியை கூப்பிட்டு தனது திமிரு படத்தில் குமுற வைத்தார் விஷால். ஹீரோயின் ரீமா சென்னை விட இப்படத்தில் ஈஸ்வரி ரோலில் நடித்த ஷ்ரேயா பேசப்பட்டார்.
நான் தமிழச்சி.. பொங்கும் ராகினி! [ 3. Sep. 2007 - 15:27]
என்னை வேற்று மொழிக்காரியாக சிலர் வதந்தி பரப்பி விடுகிறார்கள். நான் பச்சைத் தமிழச்சியாக்கும் என்று பொறுமுகிறார் 'தீ' ராகினி. சுந்தர்.சி.க்கு ஜோடியாக தீ என்ற படத்தில் நடிக்கிறார் ராகினி. வாவ் என்று சொல்லும் அளவுக்கு படு அழகுப் பெண் இவர். மலேசியாவிலிருந்து வந்தவர் என்பதால் மலைக்க வைக்கும் கலருடனும், தித்திக்கும் அழகுடனும் தீ படத்தில் சுந்தர்.சியுடன் ஜோடி போட்டு நடிக்கிறார்.