 வாழைப்பூவைக் கொண்டு செய்யப்படும் இந்த படோலி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதோ உங்களுக்கான செய்முறை... என்ன தேவை? வாழைப்பூ - 1 கடலைப்பருப்பு - 125 கிராம் காய்ந்த மிளகாய் - 6 வெங்காயம் (பெரியது) - 2 கடுகு - சிறிதளவு சீரகம் - 1 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு - சிறிதளவு பெருங்காயம் - 1 சிறியதுண்டு மஞ்சள்பொடி - 1 சிட்டிகை எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எப்படி செய்வது? * வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * கடலைப் பருப்பை ஊறவைத்து, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், சீரகம், மஞ்சள் பொடி நறுக்கிய வாழைப்பூ சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். * வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அரைத்த விழுதோடு கலந்து கொள்ளவும். * வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன், கடுகு, உளுந்தம்பருப்பைத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்துச் சிறு தீயில் வதக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து இறக்கிவிடலாம். |