இராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் சரித்திரம் இல்லை. அது அறிவுக்குப் பொருத்த மானதாகவோ ஆராச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது. இராமாயணக் குறிப்புக்கள்
உயர் எண்ணங்கள் [25. Oct. 2007 - 05:08]
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்கு தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ, அவ்வளவுக் கவ்வளவு காட்டு மிராண்டி என்பது பொருள். மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள்.பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி நாடி.
ஈழப் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் சதி.. [ 8. Oct. 2007 - 05:01]
பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் எழுதி வெளி வந்திருக்கும் நூல் "ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி". எண்பதுகளின் தொடக்க காலம் முதல் இந்திய உளவு நிறுவனங்கள் எவ்வாறு ஈழப் பிரச்சினையில் பல்வேறு சதிகளில் ஈடுபட்டனர் என்பதை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. பாண்டி பசாரில் நடந்த துப்பாக்கிச் சூடு முதல், அண்மையில் நடந்த மீனவர்கள் கடத்தல் வரை, விடுதலைப் புலிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிராகவும், தன்னுடைய ஆளுகையை நிலைநிறுத்தும் ஒரே நோக்கோடும், இந்திய உளவுத் துறை தொடர்ந்து திட்டமிட்ட சதி வலைகளைப் பின்னியதையும், அதற்கு இந்தியாவை ஆண்ட கட்சிகள் துணை போன அவலத்தையும் மிகுந்த துணிச்சலோடு இந்நூல் அம்பலப்படுத்தியிருக்கிறது. அந்த நூலிலிருந்து...