புராணங்களும் இதிகாசங்களும் [21. Aug. 2007 - 06:29]
புராணங்கள் இந்து மதத்தின் அடிப்படை வேர்கள் புராணங்கள் இல்லை என்றால் இந்து மதமும் இல்லை கடவுள்களும் இல்லை. ஏனெனில் புராணங்களில் வரும் கதாபாத்திரங்களே இந்து மதத்தில் கடவுள்களாக விளங்குகின்றன.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.. [14. Aug. 2007 - 07:27]
இந்தியாவின் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் தலை சிறந்த தலைவராக விளங்கியவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆவார். இந்தக் காரணத்தாலேயே, இவரை இந் நூலின் மூலப் பகுதியில் சேர்க்க வேண்டும் என்று மிகப் பலர் வலியுறுத்தினார்கள். ஆனால், இங்கிலாந்து வல்லரசின் ஆதிக்கத்திலிருந்து இந்தியாவுக்கு விடுதலை, முன்னரோ பின்னரோ கட்டாயமாகக் கிடைத்துவிடக்கூடிய நிலை இருந்தது.
அமெரிக்காவின் 16ஆவது குடியரசுத் தலைவராக விளங்கிய ஆபிரகாம் லிங்கன் அந்த நாட்டில் அல்லது வேறெந்த நாட்டிலும் - தோன்றிய மிக்க புகழ் வாய்ந்த - மிகப்பெரும் போற்றுதலைப் பெற்ற - அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆவார். அப்படியானால் எனது பட்டியலில் ஏன் சேர்க்கப்படவில்லை? கொடிய அடிமை முறையை ஒழித்து 35,00,000 அடிமைகளுக்கு விடுதலை அளித்தது ஒரு மாபெரும் சாதனை இல்லையா?