FAQ   Search   Memberlist   Usergroups   Register   Profile   Log in to check your private messages   Log in 

Meenam

 
Post new topic   Reply to topic    TamilsFront Forum Index -> ::Spiritual::
View previous topic :: View next topic  
Author Message
snegidan
TamilsFront Admin


Joined: 27 Mar 2006
Posts: 1358
Location: Oslo

PostPosted: Sun Apr 08, 2007 10:00 pm    Post subject: Meenam Reply with quote

Quote:
மீன ராசி நேயர்களே!

எக்காலத்திலும் கடமையைத் தவறாமல் செய்து வரும் உங்களுக்கு இந்த ஆண்டு நிறைய தர்மங்கள் செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் உயரிய சிந்தனைகளால் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.
தீயோர்க்கும் நல்லதே செய்யும் உயர்ந்த குணம் கொண்டவராகவும், "பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே' என்கிற வாக்குக்கு உரியவராகவும் பாக்ய ஸ்தான குரு பகவான் உங்களை மாற்றிவிடுவார் என்பதில் ஐயமில்லை.

பூர்வ புண்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனி பகவானை குரு பகவான் பார்ப்பதால் புத்திர வழியில் இருந்து வந்த குறைகள் விலகும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்கிற பிடிவாத நிலை மாறி, நிதர்சன உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். உங்கள் முடிவுகள் நல்ல முடிவுகளாகவே அமையும்.

உங்கள் ராசியையும், தைரிய ஸ்தானத்தையும் பார்வையிடும் குரு பகவான், உங்களின் நற்குணங்களை சமூகம் அறியச் செய்வார். நிதானக் குணமும், ஆரவாரமற்ற செயல்களும் உங்களை புகழின் உச்சிக்கே கொண்டுசென்று விடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கொள்கைப் பிடிப்பு உண்டாகும்.

ஆடி மாதத்திற்குப் பிறகு சனி பகவான் உங்களின் ருணரோக சத்ரு ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கே அமர்ந்துள்ள ஞான, மோட்சகாரகனான கேது பகவானுடன் இணைந்து அதிபலம் பெற்று, உங்களை பராக்ரமசாலி, பரிசுத்தர், அறிவாளி எனப் புகழப்படும் நிலைமைக்கு ஏற்றிவிடுவார். உங்களின் உதவும் குணத்தை மற்றவர் அறியச் செய்வார். நெடுநாட்களாக உங்களுக்கு இருந்து வந்த காது வலி, பல் வலி போன்ற உபாதைகள் தீர்ந்துவிடும்.

இந்தக் காலகட்டத்தில் விரய ஸ்தான ராசியில் அமர்ந்துள்ள ராகு பகவானால் உற்றார்-உறவினர்களின் ஆதரவு குறையும்.

கார்த்திகை மாதத்தில் தொழில் ஸ்தான ராசியாலும், உங்கள் ராசிக்கு மூலத் திரிகோண பலம் பெற்ற தனுசு ராசிக்கு குரு பகவான் ராசியாதிபதியாகி பெயர்ச்சியாவதாலும் கூட்டு வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். அவரின் பார்வை சனி பகவான் மீதும், கேது பகவான் மீதும், ஆறாம் வீட்டின் மீதும் படிவதால் எதிரிகள் தெறித்து ஓடுவார்கள்.

பணம் ஊற்றுக்கண் போல் பெருகும். நவீன வாகன யோகம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட யோகமும் கிடைக்கும். மொத்தத்தில் நலம் பயக்கும் ஆண்டாகவே இந்தப் புத்தாண்டு உங்களுக்கு உதயமாகிறது.

உத்யோகஸ்தர்களைப் பொறுத்தவரை மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்கச் சற்று அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் என்பதால் வேலைப்பளு சற்று குறையும். பணவரவு இந்த ஆண்டு முழுவதும் சரளமாக இருந்து வரும். அதேநேரம் இடமாற்ற முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

இந்த ராசி வியாபாரிகளுக்கு இது வெற்றிகரமான ஆண்டு. உங்கள் வியாபார யுக்தி மிகவும் சிறப்புடனும், கவர்ச்சியுடனும் இருப்பதால் வாடிக்கையாளர்கள் மயங்கி உங்களை நோக்கிப் படையெடுப்பார்கள். இதனால் வியாபாரம் அமோகமாக நடக்கும். காலதாமதமானாலும் திட்டமிட்ட வேலைகளில் வெற்றி பெறுவீர்கள்.

விவசாயிகள் உபதொழில்களில் கவனம் செலுத்துவார்கள். இதனால் விளைச்சலில் ஏற்படும் வருமானக் குறைவுகளை ஈடு கட்டுவீர்கள். அரசு மானியங்களும் கிடைக்கும். அதே சமயம், செலவு குறைந்த மாற்றுப் பயிர்களையும் பயிரிட்டு பலன் பெறலாம். தொழிலாளர்களிடம் அனுசரணையோடு நடந்து கொண்டால் மேலும் நன்மையடையலாம். இருப்பினும் புழு, பூச்சிகளால் சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு தொல்லை கொடுத்து வந்த எதிரிகளின் பலம் குறையும். ஆகையால் அவர்கள் உங்களிடமிருந்து விலகியே நிற்பார்கள். அதோடு கட்சியில் உங்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். அனைத்துச் செயல்களையும் நேர்த்தியுடன் செய்து முடிப்பீர்கள். நண்பர்களால் பலன் அடைவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு, அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். முக்கிய முடிவுகளை யோசித்து எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளை செய்து, கைப்பணத்தைக் கரைக்க வேண்டாம். பேசும் பொழுது கடும் சொற்களை உதிர்க்க வேண்டாம்.

மாணவமணிகள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவார்கள். பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் நற்பெயர் எடுப்பார்கள். அதேநேரம் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். மனம் சிதறாமல் படிப்பில் கவனம் செலுத்தவும். இறை பக்தியை வளர்த்துக் கொள்ளவும்.

பரிகாரம்: பிரதி செவ்வாய்க்கிழமைகளில் "கந்த சஷ்டி கவசம்' பாராயணம் செய்து, செந்திலாண்டவனை வணங்கி வரவும்.

_________________

பூக்கள் என்றால் அழகென்பார்கள். ஆனால்
அப்பூக்களெல்லாம் உன்னைமாதிரி புன்னகை சிந்துமா?

-Snegidan-
Back to top
View user's profile Send private message Visit poster's website
Display posts from previous:   
Post new topic   Reply to topic    TamilsFront Forum Index -> ::Spiritual:: All times are GMT + 1 Hour
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You can edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


© copyright: 200-2006 TamilsFront Team

Develop by: TamilsFront.Net Team.