என் உயிரே! ஏனடா என்னுள் சத்தமின்றி நுழைந்தாய் வேலிகள் போட்ட என் இதயத்தில் காதல் ரோஜாவாய் ஏன் மலர்ந்தாய் என் இரவுகளை ஏன் வண்ணமாக்கினாய் தூங்கும் போது கனவாகச் சிரித்தாய் என்றும் உன் நினைவாலே ஏங்க வைத்தாய் உன்னோடு பேசாத நிமிடங்களை வெறுக்க வைத்தாய் உனக்காகத் தான் நான் என்று உன்னைத் தந்தாய் கண்ணே! என் உயிரில் உயிராகியவனே ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும் நான் மரணத்தோடு கலந்தாலும் உன்னுடனே இருப்பேன்
TaMilRoSe
கண்களிலே கண்ணீர் [12. Jun. 2007 - 04:04]
எங்கிருந்தோ வந்து என் இதயத்தை திருடிச் சென்றாய் எடுத்து சென்ற இதயத்தை என்ன செய்தாய்? என்னை நான் மறந்து விட்டேன் உன்னை மட்டும் நினைக்கிறேன் உன் சிரிப்பொலி கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தால் கண் எதிரே நீ இல்லை அதனால் என் கண்களிலே கண்ணீர்
என்னுயிர் என்னிடம்? [12. Jun. 2007 - 04:00]
என்னுயிர் என்னிடம் இருந்தாலும் என் உள்ளம் வந்தது உன்னிடத்தில்..
அழகான அந்த நாட்களில் அன்பாகப் பேசிய வார்த்தைகள் அமுதாக இருந்ததேடா அதே வார்த்தைகள் இன்று அமிலமாகத் தெரிகிறதே அது ஏனடா???????? read more
காதலனே சொல்லிவிடு [12. Jun. 2007 - 03:53]
காதலனே சொல்லிவிடு
என் உயிரின் உயிராகியவனே உறங்கும் போதும் உறங்குவதில்லை உன் இனிய நினைவுகள் என்னை நானே மறந்துவிட்டேன் என் சகலமும் நீயாகி விட்டாய் நீயின்யி நான் இல்லையடா உனக்காகவே நான் வாழ்கின்றேன் ...