வாசல்

நமதுசேவை வாசகர்பதிவு   விளம்பரமிட ஞாபகத்தில் ஆரம்ப பக்கம் தொடர்புகட்கு

 -Welcome to TamilsFront web.  Download unicode font to read in Tamil-

Today is:

நமது முற்றம்
நமது முற்றம்
  அரசியல்
  இலக்கியம்
  வண்ணத்திரை
  அறிவியல்
  நூலகம்
  ஆன்மீகம்
  கவிமுற்றம்
  தொலைக்காட்சி
  நகைச்சுவை
  அரட்டை
இணைப்புக்கள்
 படத்தொகுப்பு
 mp3 பாடல்கள்
 காணொளிபாடல்
 திரைப்படங்கள்
டிவி நிகழ்ச்சிகள்
Forum
 சிறந்தபக்கம்
 
இணையங்கள்
  Luxinfo.ch
  Nithus.net
  Movie Forum
  mykathiravan
  ஈழம்செய்திகள்
  tbz-sg.ch
 
தமிழக செய்திகள்
  தட்ஸ்தமிழ்
  தமிழகப் பேச்சு
  குமுதம்
  தமிழன் செய்தி
  விடுதலை
  தென்செய்தி
  தமிழ்மணம்
 
சிறப்பு


[TamilSelvan spes.]

 
விளம்பரம்


[1 month 16$]

ராசிபலன்

 
வார பலன்... [ 4. Sep. 2007 - 03:34]

உங்களுக்கு இந்த வாரத்தில் மகிழ்ச்சி கூடும். குடும்பத்தில் அமைதி திரும்பும். போட்டி மனப்பான்மை விலகும். கணவன்-மனைவிக்குள் உண்மையாக அன்பு செலுத்துவீர்கள். குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் பேச்சு வார்த்தையில் முதிர்ச்சி தெரியும். உயர்கல்விக்காக சில ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். சொந்த பந்தங்களின் சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள்.

வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். கன்னிப்பெண்களின் காதல் திருப்திகரமாக இருக்கும். ஆன்மீகவாதிகள் அறிமுகமாவார்கள். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களின் தொந்தரவு குறையும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். சொத்துச்சிக்கல் தீர்வுக்கு வரும். பொன், பொருள் சேர்க்கை இனி உண்டு.

வியாபாரத்தில் சுமூகமான லாபம் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கடையை மாற்றியமைப்பீர்கள். கூட்டுத்தொழிலில் இருந்த சிக்கல்களை சமாளிப்பீர்கள். ஷேர், எண்டர்பிரைஸ் வகைகள் ஆதாயம் தரும். உத்யோகத்தில் உங்களின் பங்களிப்பு அதிகரிக்கும். வேலைசுமை குறையும். கலைத்துறையினர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். நிம்மதி தங்கும் வாரமிது.

உங்களுக்கு இந்த வாரத்தில் அதிஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். இழுபறியான காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளை விரும்பிய கோர்ஸில் சேர்ப்பீர்கள். முன் கோபம் விலகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மனகுழப்பங்கள் தீரும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெருகும். மருத்துவச் செலவுகள் குறையும். நட்பு வட்டாரம் பெருகும்.

வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக அமையும். அரசுக்காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்களின் நினைவுத்திறன் பெருகும். உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். வீடு, வாகனச் செலவுகள் குறையும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வழக்குகளில் வெற்றி உண்டு.

வியாபாரத்தில் மறைமுக எதிரிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். இரும்பு, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் சுமுகமான லாபம் உண்டு. புது வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் அனுசரித்து போவீர்கள். சக ஊழையர்களின் அன்புத்தொல்லைகள் நீங்கும். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். மனச் சோர்வு நீங்கும். எதிலும் வெற்றி கிட்டும் வாரமிது.

இந்த வாரத்தில் தடைகள் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தேக ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். கணவன்-மனைவில்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிள்ளைகளின் ஒத்துழைப்புன் கிடைக்கும். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பணவரவு தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. சொத்துச் சிக்கல் விலகும். பெற்றோரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை நீங்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். மற்றவர்களிடம் அனுசரித்து போவீர்கள். குல தெய்வப்பிராத்தனைகள் நிறைவேறும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வீடு, வாகனச் செலவுகள் குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வேற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி உண்டு. மாணவர்கள் விரும்பிய கோர்ஸில் சேருவார்கள்.

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். பழைய சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் சுமுகமான நிலை காணப்படும். இரும்பு, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். உத்யோகத்தில் தேங்கிக்கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சம்பளம் உயரும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உற்சாகத்துடன் காணப்படும் வாரமிது.

உங்களுக்கு இந்த வாரத்தில் காரியத்தடைகள் விலகும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்திசெவீர்கள். முந்கோபம், டெஷன் விலகும். உடன் பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். நண்பர்களின் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய கசப்புணர்வுகள் நீங்கும்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகளை சுமுகமாக தீர்ப்பீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். குல தெய்வக் கோவிலுக்கு சென்று வருவீர்கள். மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். அயல் நாட்டிலிருப்பவர்களின் உதவி கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வாகனச் செலவுகள் நீங்கும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். ஷேர், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் பெருகும். கூட்டுத்தொழிலில் சுமுகமான லாபம் உண்டு. பங்குதாரர்களை அனுசரித்து போவீர்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் தொந்தரவு விலகும். சம்பளப்பாக்கி கைக்கு வரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட்டு பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள். வேலை பளு குறையும். தடைகள் உடைபடும் வாரமிது.

இந்த வாரத்தில் முற்பகுதி சுமாராக இருந்தாலும் பிற்பகுதி மகிழ்ச்சிகரமாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியத்தடைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வந்து விலகும். பிள்ளைகளால் நிலவி வந்த வீண் செலவுகள் குறையும். அவர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சகோதர வகையில் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சிம் பெருகும். சொத்துச் சம்பந்தப்பட்டப் பிரச்சனைகளை நிதானமாக கையாளுவது நல்லது. பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். கன்னிப்பெண்களுக்கு வயிற்று வலி, முச்சுப்பிடிப்பு வந்து போகும். தாயின் ஆலோசனையின்றி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உயர் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.  யாரையும் நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். பழைய கசப்பான சம்பங்களை நினைத்து வேதனைபட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகள் வந்து போகும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். வீடு, வாகனச் செலவுகளை குறைக்க முற்படுவீர்கள்.

வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான லாபம் உண்டு. வேலையாட்களிடம் அனுசரித்து போவது நல்லது. இரும்பு, புரோக்கரேஜ், உணவு வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் பணிகள் அதிகமானலும் மகிழ்ச்சியுடன் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வேறு நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். சக பணியாளர்களை அனுசரித்து போவீர்கள். முயற்சியால் முன்னேறும் வாரமிது.

உங்களுக்கு இந்த வாரத்தில் கொஞ்சம் அலைச்சலும், வீண் செலவுகளும் வந்து போகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து போவது நல்லது. கணவன்-மனைவி உறவு சீராக இருக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வயிற்று வலி, நெஞ்சு வலி வந்து போகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். மனக் குழப்பங்கள் வந்து போகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

வெளிவட்டாரத்தில் அனுசரித்து போவீர்கள். கன்னிப்பெண்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். பிரபலங்களை சந்திப்பதன் மூலம் உதவிகள் கிடைக்கும். அரசுக் காரியங்களில் நிதானம் தேவை. உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் திடீர் முடிவுகளை எடுக்க வேண்டாம். மாணவர்களின் நினைவுத்திறன் பெருகும். உயர் கல்வியில் அக்கறை காட்டுவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் எல்லைக்குட்பட்டு பழகுவது நல்லது. வீடு, வாகனச் செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலையாட்களை அனுசரித்து போவீர்கள். கூட்டுதொழிலில் பங்குதாரர்களிடம் மனஸ்தாபங்கள் வந்து போகும். பழைய பாக்கிகளை நிதானமாக வசூலிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். மேலதிகாரியிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். சம்பளம் கைக்கு வரும். எதிலும் கொஞ்சம் நிதானமாக செயல்படும் வாரமிது.

உங்களுக்கு இந்த வாரத்தில் வீண் செலவுகளும், அலைச்சலும் வந்து போகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. கணவன்-மனைவி உறவு திருப்தி தருவதாக அமையும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். உடல் நிலை சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். முன் கோபம், டென்ஷன் வந்து போகும். பெற்றோருடன் அனுசரித்து போவது நல்லது. வெளியூர் பயணங்கள் அலைச்சல் தரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதன் மூலம் மன நிம்மதி கிட்டும்.

வெளிவட்டாரத்தில் வழக்கமான அமைதி கிட்டும். கன்னிப்பெண்கள் சிந்தித்து செயல்படுவீர்கள். திடீர் முடிவுகளை தவிர்க்கவும். மாதவிடாய் கோளாறு, இடுப்பு வலி வந்து போகும். வீண் வறட்டுக் கௌரவத்திற்காக செலவு செய்யாதீர்கள். நம்பிக்கைக்குரியவர்களின் சந்திப்பு நிகழும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை. மாணவர்கள் விரும்பிய கோர்ஸில் போராடி சேருவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் குடும்ப விசயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். அவ்வப்போது மனக்குழப்பங்கள் வந்து போகும். வழக்கு விவகாரங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. 

வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. வேலையாட்களை அனுசரித்து போங்கள். பெரிய முதலீடுகளை தவிர்க்கப் பாருங்கள். ஷேர், கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் பிரச்சனை வேண்டாம். உத்யோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. மேலதிகாரியின் தொந்தரவு வந்து போகும். சக ஊழியர்களிடம் யாரைப் பற்றியும் விமர்சனம் வேண்டாம். சம்பளம் கைக்கு வந்து சேரும். சிந்தித்து செயல்படும் வாரமிது.

உங்களுக்கு இந்த வாரத்தில் எண்ணங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிலவி வந்த பனிப்போர் விலகும். கணவன்-மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் இன்மையான பேச்சை ரசிப்பீர்கள். அவர்களின் கல்வி, ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் தக்க சமயத்தில் கைக்கு வந்து சேரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோருடன் அனுசரித்து போவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மன அமைதி கிட்டும்.

வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். சொத்து விவகாரங்களில் நிலவி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு சுப காரிய தடைகள் நீங்கும். வி.ஐ.பி.களின் உதவியை நாடுவீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். அரைகுறையாக நிண்று போன பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். அண்டை வீட்டாருடன் அனுசரித்து போவது நல்லது. வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவி கிடைக்கும். புது முயற்சிகளின் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு லாபத்தை அதிகரிப்பீர்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்கள் வந்து சேருவார்கள். எண்டர்பிரைஸ், ரியல் எஸ்டேட் வகைகளால் முன்னேற்றம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு கெடுபிடிகள் தளரும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தடைபட்ட சம்பள உயர்வு இனி கிடைக்கும். சக பணியாளர்களிடம் விட்டுக்கொடுத்து போவீர்கள். வேறு நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் தேடி வரும். முன்னேற்றமடையும் வாரமிது.

உங்களுக்கு இந்த வாரத்தில் எதிலும் வெற்றியே கிட்டும். சொன்ன சொல்லைக் காப்பாற்றத்துடிப்புடன் செயல்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட வீண் செலவுகள் இனி இருக்காது. படிப்பில் தீவிரம் காட்டுவார்கள். அவர்களின் பிடிவாதக்குணம், முன் கோபம் விலகும். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. மனகுழப்பங்கள் தீரும். தாயின் உடல் நிலை சீராக அமையும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெருகும். நண்பர்களின் சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள்.

வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வி.ஐ.பி.களின் உதவியால் நன்மை பிறக்கும். கன்னிப்பெண்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. கனவுத்தொல்லை, கண் எரிச்சல் விலகும். வீடு, வாகனச் செலவுகள் குறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். பழைய நல்ல சம்பங்களை நினைவு கூறுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்து போவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதன் மூலம் மன நிம்மதி பெருகும். பேச்சில் இனிமை கூடும். வழக்குகளில் வெற்றி உண்டு. வேற்று மதத்தினரால் திடீர் திருப்பங்கள் உண்டு.

வியாபாரத்தில் பற்று வரவு கூடும். புது யுக்திகளை கையாண்டு லாபத்தைக் கூட்டுவீர்கள். வேலையாட்களின் தொந்தரவு கிட்டும். உணவு, ஷேர், ரியல் எஸ்டேட் வகைகளால் முன்னேற்றம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல் சுமுகமாக இருக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சம்பளம் உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதிக்கும் வாரமிது.

இந்த வாரத்தில் சிந்தித்து செயல்படுவதால் வீண் அலைச்சல் குறையும். கணவன்-மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். முன் கோபம் வந்து போகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். அவர்கள் விரும்பிய கோர்ஸில் சேர்க்க முற்படுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களிடம் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். கன்னிப்பெண்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பது நல்லது. கனவுத்தொல்லை, வயிற்று வலி வந்து போகும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். மாணவர்களின் நினைவுத்திறன் பெருகும். பொழுது போக்கு விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் தாமதமாக வந்து சேரும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். வேற்று மதத்தினரால் உதவிகள் கிடைக்கும்.

வியாபரத்தில் அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டாம். புது நபர்களின் சந்திப்பு நிகழும். வேலையாட்களை அனுசரித்து போவது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் நிதானம் தேவை. பாக்கிகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில் வழக்கமான நிலை காணப்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்யோகத்தில் வேலைகளை முடிப்பதில் அதிக கவனம் செலுத்தப் பாருங்கள். மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து போவது நல்லது. மகிழ்ச்சி தங்கும் வாரமிது.

உங்களுக்கு இந்த வாரத்தில் நன்மை பிறக்கும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். பணப்பற்றாக்குறை நீங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பிள்ளைகளின்  உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். விரும்பிய கோர்ஸில் சேருவார்கள். முன் கோபம், டென்ஷன் வந்து விலகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சொந்த பந்தங்களின் வருகை அதிகரிக்கும்.

வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். கன்னிப்பெண்கள் பெற்றோரின் ஆலோசனையுடன் செயல்படுவது நல்லது. குல தெய்வப்பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சொத்துச் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் வந்து போகும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். மாணவர்களின் நினைவுத்திறன் பெருகும். உயர் கல்வி சேருவார்கள். யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். வாகனச் செலவுகள் குறையும்.

வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட், உணவு, ஷேர் வகைகளால் ஆதாயம் பெருகும். கூட்டுத்தொழிலில் சுமுகமான நிலை காணப்படும். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் விட்டுக்கொடுத்து போவீர்கள். சக ஊழியர்களிடம் அளவாக பேசுவது நல்லது. சம்பளம் கைக்கு வரும். நிம்மதி காணும் வாரமிது.

back to all news
News by: TamilsFront.Net
 
 
 
|இணைப்பில்: நோக்கர்கள்| |04/06/2006முதல் நோக்கியவர்கள் தொகை: |
All TamilsFront graphics

All TamilsFront graphics, logos and advertisements  are Copyright by TamilsFront Team. [2003-2007]
|Designed by Arenawebdesign © 2006 | Powered by TamilsFront.Net/Org|
|Best viewed in Internet Explore6 with Windows XP|