வேர்ல்ட் ஸ்பேஸ்-எம்எஸ்என் கூட்டு இசை முழக்கம். [19. Nov. 2007 - 06:53]
உலகம் முழுவதும் உள்ள இசைப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக, எம்எஸ்என் இணைய தளத்தில் கர்நாடக சங்கீதம் மற்றும் அனைத்து மொழிகளிலும் இசை முழக்கங்களை நேயர்கள் கேட்டு மகிழலாம்.
இணையதளம் எதெற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்த்தோமானால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். நாம் பல பெண்களை கடைத் தெருவிலோ, ரயிலிலோ, பேருந்திலோ, கடற்கரையிலோ பார்க்கிறோம். திடீரென ஒரு நாள் அந்த பெண்கள் கூட்டத்தில் உங்களைக் கவர்ந்த கனவுக் கன்னி கண்களில் தட்டுப்பட்டு விடலாம்.
இணையத்தில் பாடல் பதிவிறக்கியவருக்கு 90 லட்சம் அபராதம்!!! [ 8. Oct. 2007 - 04:47]
இணையத்தில் காஜ்சா கோப்பு பகிர்வு வசதியை பயன்படுத்தி பாடல்களை பதிவிறக்கியும் பகிர்ந்தும்கொண்டிமிருந்த அமெரிக்காவின் மினசோட்டாவைச் சேர்ந்த பெண்மணிக்கு நீதிமன்றம் $222,000 அபராதம் விதித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 90 லட்சம்.
நகைச்சுவை உணர்வுள்ள கணினிகள்: அமெரிக்காவில் அதிசய கண்டுபிடிப்பு [31. Aug. 2007 - 09:07]
மனித மூளையின் அமைப்பை ஒத்து வடிவமைக்கப்பட்டவைகள் தான் கணினிகள். ஆனால் மனிதனின் அத்தனை திறன்களும் அதற்கு இருக்கிறதா என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகிறோம். உதாரணமாக கணிகள் தானாகவே ஜோக்குகளை புரிந்து கொள்ளுமா? உருவாக்குமா? என்று நாம் கேட்கலாம்.
இ-மெயில்களை சென்சார் செய்யும் புதிய மென்பொருள். [26. Aug. 2007 - 05:41]
ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு மருத்துவமனையின் அல்லது எந்த ஒரு பெரிய அமைப்பாயிருப்பினும் அதன் பணியாளர்கள் அல்லது எந்த ஒருவரும் அனுப்பும் இ-மெயிலில் என்ன உள்ளது என்பதை சென்சார் செய்யும் புதிய சாப்ட்வேர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற, அனாவசியமான மெயில்கள் மூலம் மோசடி. [26. Aug. 2007 - 05:39]
தேவையற்ற, அனாவசியமான, பெயர் தெரியாத இ-மெயில்களை (Spam) நாம் தினந்தோறும் எதிர்கொண்டு வருகிறோம். ஒன்று இந்த மெயில்களில் வைரஸ் இருந்து உங்கள் சொந்த கணினியாக இருந்தால் அதனையோ அல்லது நெட்வொர்க்குடன் இணைந்திருந்தால் நெட்வொர்க் மூலமாக அனைத்து கணினிகளையோ செயலிழக்கச் செய்யும்.
கணினிகளின் வேகத்தை அதிகரிக்கும் சிப்கள். [26. Aug. 2007 - 05:35]
கணினி நெட்வொர்க்கிங் மற்றும் டிஜிட்டல் வீடியோ புரோசசிங் போன்ற எம்பெடெட் பயன்பாடுகளில் திறனை மேம்படுத்தவும் கணினி வடிவமைப்பில் தரவுப்பாதைகளை (Data Paths) அடைவதில் தாமதமும், ஏற்படும் தடைகளையும் நீக்க அகர்வாலின் டிலேரா நிறுவனம் புதிய புரோசஸர் வகையை கண்டுபிடித்துள்ளது.
நிலைகுலைய வைத்த இன்டர்நெட் தரவுத் திருட்டு [26. Aug. 2007 - 05:33]
இன்டர்நெட் ஹேக்கர்கள் (Hackers) என்று பரவலாக அழைக்கப்படும் ஒரு கும்பல் வேலைவாய்ப்பிற்கான பிரபல அமெரிக்க இணையதளம் ஒன்றிலிருந்து ரகசியமான தரவுகள் (Datas) பலவற்றை திருடியுள்ளது. வேலைவாய்ப்பிற்காக அந்த இணையதளத்தில் தங்கள் பயோ-டேட்டாவை பதிவு செய்திருந்தவர்களில் சுமார் 10 லட்சம் பேரின் முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் கடத்தியுள்ளனர். இந்த செய்தியை வெளியிட அந்த இணையதள நிறுவனம் 5 நாட்கள் காத்திருந்தது என்பதுதான் இதில் சுவாரசியமான விஷயம்.
நோக்கியாவில் விண்டோஸ் லைவ் சேவைகள்.. [26. Aug. 2007 - 05:27]
மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதாவது மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ் சேவைகளை மொபைல் போன்களுக்கு வழங்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி விண்டோஸ் லைவ் ஹாட்மெயில் மற்றும் லைவ் மெசஞ்சர் சேவைகளை அதன் அதி திறன் சீரீஸ்-60 மொபைல்களில் நோக்கியா வழங்கவுள்ளது.
சார்லஸ் டார்வின் அவர்கள் இன்றைய உலகச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். மனிதர்கள் உட்பட உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி ஆகியன குறித்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து அவர் ஆய்வு மேற்கொண்டார். லண்டன் லினென் சங்கத்தில் (Linean Society) தமது 27 ஆண்டுகால ஆராய்ச்சி முடிவுகளை டார்வின் வெளியிட்டபோது, பார்வையாளர்களிடமிருந்து கூச்சலும், குழப்பமுமே வெளிப்பட்டன.