வாசல்

நமதுசேவை வாசகர்பதிவு   விளம்பரமிட ஞாபகத்தில் ஆரம்ப பக்கம் தொடர்புகட்கு

 -Welcome to TamilsFront web.  Download unicode font to read in Tamil-

Today is:

நமது முற்றம்
நமது முற்றம்
  அரசியல்
  இலக்கியம்
  வண்ணத்திரை
  அறிவியல்
  நூலகம்
  ஆன்மீகம்
  கவிமுற்றம்
  தொலைக்காட்சி
  நகைச்சுவை
  அரட்டை
இணைப்புக்கள்
 படத்தொகுப்பு
 mp3 பாடல்கள்
 காணொளிபாடல்
 திரைப்படங்கள்
டிவி நிகழ்ச்சிகள்
Forum
 சிறந்தபக்கம்
 
இணையங்கள்
  Luxinfo.ch
  Nithus.net
  Movie Forum
  mykathiravan
  ஈழம்செய்திகள்
  tbz-sg.ch
 
தமிழக செய்திகள்
  தட்ஸ்தமிழ்
  தமிழகப் பேச்சு
  குமுதம்
  தமிழன் செய்தி
  விடுதலை
  தென்செய்தி
  தமிழ்மணம்
 
சிறப்பு


[TamilSelvan spes.]

 
விளம்பரம்


[1 month 16$]

அறிவியல்

 
கணினிகளின் வேகத்தை அதிகரிக்கும் சிப்கள். [26. Aug. 2007 - 05:35]

கணினி நெட்வொர்க்கிங் மற்றும் டிஜிட்டல் வீடியோ புரோசசிங் போன்ற எம்பெடெட் பயன்பாடுகளில் திறனை மேம்படுத்தவும் கணினி வடிவமைப்பில் தரவுப்பாதைகளை (Data Paths) அடைவதில் தாமதமும், ஏற்படும் தடைகளையும் நீக்க அகர்வாலின் டிலேரா நிறுவனம் புதிய புரோசஸர் வகையை கண்டுபிடித்துள்ளது.

டிலேரா ப்ராசஸர் 64-கோர் புரோசஸர் என்று அழைக்கப்படுகிறது. ஒரே சிப்பில் பெரிய அளவிலான சி புராகிராமில் தயாரிக்ககூடிய மைய மெமரிகளை ஐமெஷ் தொழில்நுட்ப முறையின் மூலம் இணைக்கிறது. இதனால் பல்வேறு கோர்களிடையே வினாடிக்கு 32 டெராபைட்கள் (Terabits) தகவல்களை கடத்தும் திறனுடையது. ஒரு டெராபைட் என்பது 1024 ஜிகா பைட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த நிறுவனத்தின் டைல்- 64 என்ற புரோசஸர் நெட்வொர்க்கிற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீடியோ ஸ்ட்ரீமிங் சர்வர்களுக்கும் இது மேலதிக திறன்களை வழங்குகிறது. அதாவது தற்போது உள்ள சிப்களை காட்டிலும் 10 மடங்கு அதிகத் திறன் கொண்டது இந்த புரோசஸர். இதில் முக்கியம் என்னவெனில் மின்சாரச் செலவு குறைவு என்பதே.

கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் இது குறித்து திங்களன்று ஹாட் சிப்ஸ் என்ற மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் இந்த அதி திறன் மைக்ரோ புரோசசர் குறித்து டிலேரா நிறுவன அதிகாரிகள் உரையாற்றினர்.

செமி கண்டக்டர்கள் துறையில்  பலமான தொழில் நுட்ப பின்னணி உள்ள நிறுவனங்களே சிறிய காலத்திற்கு ஜொலித்து பிறகு காணாமல் போய்விடுகின்றன. இந்நிலையில் இந்த நிறுவனம் கணினித்துறையின் மையப் பிரச்சனையான ஆமைவேக மற்றும் தடை ஏற்படுத்தும் தரவுப்பாதை என்பதை ஒழிக்க முனைந்துள்ளது.

அளவுக்கதிகமான மெமரிகளுடன் புரோசஸர்களை உருவாக்கினால் அதனை ஒன்றுடன் ஒன்று எவ்வாறு இணைப்பது என்ற தொழில்நுட்ப முறையை நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்கிறார் டிலேரா நிறுவனத்தின் ஆனந்த் அகர்வால்.

இந்த தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்துவரும் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் ப்ராக்ஸிமிடி டெக்னாலஜி என்ற ஒன்றை ஆய்வு செய்து வருகிறது. அதாவது தங்களிடையே நெருங்கியிருக்கும் பல்வேறு சிப்களை ஒயர்கள் இல்லாமல் எப்படி தொடர்பு கொள்ள வைப்பது என்று ஆய்வு செய்து வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் இன்டெல் நிறுவனம் 80-கோர் சிப் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதில் சிப்கள் எம்பெடெட் முறையில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

சரி இவ்வகை உயர் தொழில்நுட்ப சிப்களினால் பயனாளர்களுக்கு என்ன பயன் ஏற்படுகிறது என்று பார்த்தால் முதலில் ஸ்பாம் என்று அழைக்கப்படும் மோசடியான தேவையற்ற தொல்லை மெயில்களை அகற்றுவது இன்றைய முக்கிய பிரச்சனையாகும்.

இது போன்ற 80கோர் 64-கோர் ரக சிப் வகைகள் மிகத் துல்லியமாக தரவுப் பொந்துகளை குடைந்து தேவையற்ற தரவுகளை கடித்து துப்பிவிடுகிறது. வீடியோ ஆன் டிமாண்ட் சிஸ்டம்கள், உயர் தொழில்நுட்ப வீடியோ, செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் மற்றும் வீடியோ கான்பரன்சிங் ஆகியவை வளர்ந்து வரும் சூழலில் இவற்றிற்கு வேகமான சிஸ்டம்கள் தேவை. அந்த பிரச்சனைகளை இந்த சிப் வகைகள் தீர்க்கும்.

புரோசஸர்களே புதிய டிரான்சிஸ்டர்கள். இவற்றின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் புரோசஸர் துறை பெயர் தெரியாமல் இருக்க இயங்கி வரும்போது கணினியின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என்று மட்டும் நமக்கு தெரிகிறது.
back to all news
News by: TamilsFront.Net
 
 
 
|இணைப்பில்: நோக்கர்கள்| |04/06/2006முதல் நோக்கியவர்கள் தொகை: |
All TamilsFront graphics

All TamilsFront graphics, logos and advertisements  are Copyright by TamilsFront Team. [2003-2007]
|Designed by Arenawebdesign © 2006 | Powered by TamilsFront.Net/Org|
|Best viewed in Internet Explore6 with Windows XP|