வாசல்

நமதுசேவை வாசகர்பதிவு   விளம்பரமிட ஞாபகத்தில் ஆரம்ப பக்கம் தொடர்புகட்கு

 -Welcome to TamilsFront web.  Download unicode font to read in Tamil-

Today is:

நமது முற்றம்
நமது முற்றம்
  அரசியல்
  இலக்கியம்
  வண்ணத்திரை
  அறிவியல்
  நூலகம்
  ஆன்மீகம்
  கவிமுற்றம்
  தொலைக்காட்சி
  நகைச்சுவை
  அரட்டை
இணைப்புக்கள்
 படத்தொகுப்பு
 mp3 பாடல்கள்
 காணொளிபாடல்
 திரைப்படங்கள்
டிவி நிகழ்ச்சிகள்
Forum
 சிறந்தபக்கம்
 
இணையங்கள்
  Luxinfo.ch
  Nithus.net
  Movie Forum
  mykathiravan
  ஈழம்செய்திகள்
  tbz-sg.ch
 
தமிழக செய்திகள்
  தட்ஸ்தமிழ்
  தமிழகப் பேச்சு
  குமுதம்
  தமிழன் செய்தி
  விடுதலை
  தென்செய்தி
  தமிழ்மணம்
 
சிறப்பு


[TamilSelvan spes.]

 
விளம்பரம்


[1 month 16$]

அறிவியல்

 
`கண்டேன் என் காதலியை' [19. Nov. 2007 - 06:52]

இணையதளம் எதெற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்த்தோமானால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். நாம் பல பெண்களை கடைத் தெருவிலோ, ரயிலிலோ, பேருந்திலோ, கடற்கரையிலோ பார்க்கிறோம். திடீரென ஒரு நாள் அந்த பெண்கள் கூட்டத்தில் உங்களைக் கவர்ந்த கனவுக் கன்னி கண்களில் தட்டுப்பட்டு விடலாம்.

ஆனால் நீங்கள் சுதாரிக்கும் முன்பு அந்த உருவம் நம் கண்களிலிருந்து மறைந்துவிடும். பிறகு அந்த பெண்ணை அடுத்த முறை பார்ப்போமா பார்க்க மாட்டோமா என்று நமக்கு தெரியாது. பலரது வாழ்வில் அதுபோன்று கண்டதும் காதல் கண்டவுடனே முடிந்து போயுள்ளது.

ஆனால்... நியூயார்க் நகரில் 21 வயது வெப் டிசைனரான பேட்ரிக் மோபெர்க், நெரிசலான பாதாள ரயிலில் அழகான இளம் பெண் ஒருவரை கண்டார். தன் உருவத்தை நேசிக்கும் இளம் வெப் டிசைனரை அறியாது அந்தப் பெண் கண்டவுடன் மறைந்தாள். ஆனால் பேட்ரிக் தனது கனவுக் கன்னி அவள்தான் என்று முடிவு செய்து விட்டார். அந்த பெண்ணை தேடிக் கண்டுபிடிக்க முயன்று தோல்வியடைந்தார்.

அதனால் அவருக்கு ஒரு பிரமாதமான எண்ணம் உதித்தது. வெப் டிசைனரான அவர் இணையதளம் ஒன்றைத் துவங்கினார். அதாவது www.nygirlofmydreams.com என்ற இணையதளத்தை அவர் துவங்கினார்.

அதில் தனது கனவுக் கன்னியின் உருவத்தை அப்படியே வரைந்து வெளியிட்டார். நீல நிற ஆடையில் தலையில் சிகப்பு நிற மலர் ஒன்றை வைத்திருப்பது போன்ற படத்தை வரைந்து வெளியிட்டார் பேட்ரிக்.

மேலும் படத்திற்கு கீழே தனது மின்னஞ்சல் முகவரி, செல்பேசி எண் இதோடு தனது வாழ்க்கையை தீர்மானிக்கும் இந்த பெண்ணை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு ஒரு வேண்டுகோளையும் சேர்த்து வெளியிட்டார் பேட்ரிக்.

தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழும் நியூயார்க் மக்களே பேட்ரிக்கின் வேண்டுகோளைக் கண்டு மனமிறங்கி விட்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பேட்ரிக் மோபெர்கிற்கு உதவி புரிய அவர்கள் காட்டிய ஆர்வம் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாய் அமைந்தது.

தனது இணையதளத்தில் இதனை வெளியிட்டவுடன் பேட்ரிக் மோபெர்கின் மின்னஞ்சலில் கடிதங்கள் குவிந்தன. செல்பேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. கடைசியில் காதலியின் நண்பர் ஒருவர் பேட்ரிக்கை தொடர்பு கொண்டார். மேலும் பேட்ரிக்கின் காதலி புகைப்படம் ஒன்றையும் அனுப்பி, இவர்தானா அவர் என்பதை உறுதி செய்ய வைத்தார்.

உடனேயே தனது இணையதளத்தில் `கண்டேன் என் காதலியை' என்று வெளியிட்டார் பேட்ரிக் மோபெர்க். அந்தப் பெண்ணின் பெயர் கேமில் ஹைட்டன், பிளாக்புக் பத்திரிக்கையில் பணியாற்றி வருபவர்.

கேமில் ஹைட்டனிடம் இது பற்றி கேட்டபோது, "இது ஒரு இன்ப அதிர்ச்சிதான், இது போன்று நடக்கும் என்று தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார். பேட்ரிக் மோபெர்கின் கனவு நிறைவேறியது.
back to all news
News by: TamilsFront.Net
 
 
 
|இணைப்பில்: நோக்கர்கள்| |04/06/2006முதல் நோக்கியவர்கள் தொகை: |
All TamilsFront graphics

All TamilsFront graphics, logos and advertisements  are Copyright by TamilsFront Team. [2003-2007]
|Designed by Arenawebdesign © 2006 | Powered by TamilsFront.Net/Org|
|Best viewed in Internet Explore6 with Windows XP|