தமிழ்ச்செல்வன் மரணம் பற்றி...? தமிழ்ச்செல்வன் உடலுக்குள் இயங்கியது ஓருயிரும் ஒரு மூளையும் அல்ல, ஓர் இயக்கம். போர்க்களத்துப் புன்னகை போய்விட்டது. ஒரு கருவூலம் கருகி விட்டது. உலகத் தமிழினம் அழுகிறது.. ஆனால், அது தன் கண்ணீரைத் துடைத்துக் கொள்வது மீண்டும் அழுவதற்கல்ல.. விடுதலைப் புலி தலைவர் எஸ். பி. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து கருணாநிதி கவிதை எழுதியது சரியா? தவறா? ஒரு விவகாரம் சரியா தவறா என்று எப்போதுமே சட்டத்தை வைத்து மட்டுமே பார்க்க முடியாது. சிலவற்றை மனசாட்சி மற்றும் தார்மீக ரீதியாகவும் அணுக வேண்டி யிருக்கிறது. அந்த வகையில் கருணாநிதியின் கவிதை நியாயமானதே. அதே நேரத்தில் விடுதலைப் புலிகளுக்குத் தன்னால், கவிதை எழுதுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற குற்றமனப்பான்மையையும் அதில் பார்க்க முடிகிறது. |